சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழாவையொட்டி கூட்டுறவு பற்றிய சிறந்த பாடலுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு

பெரம்பலூர்,ஏப்.25: சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழாவையொட்டி கூட்டுறவு பற்றிய சிறந்த பாடலுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அரியலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். 2025-ஆம் ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் பொதுமக்கள், கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள் மற்றும் துறை அலுவலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. அவ்வாறு அனுப்பப்படும் பாடலானது இசையமைக்கப்பட்டு 5 நிமிடங்கள் ஒலிபரப்பக்கூடிய வகையில் பாடல் வரிகள் இருக்க வேண்டும்.

கூட்டுறவு பற்றிய தமிழில் தனித்துவமான பாடலாக இருக்க வேண்டும். கூட்டுறவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூட்டுறவு பற்றிய எழுச்சி மற்றும் உத்வேகம் உண்டாக்கக்கூடியதாக பாடல் வரிகள் இருக்க வேண்டும். அனுப்பப்படும் பாடல்களில் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பணமுடிப்பு மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர்கள் தங்கள் பாடலை சி.டி (CD) அல்லது பென்டிரைவ் (Pen drive) மூலம் கூரியர் (Courier) அல்லது தபால் வாயிலாக மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி.நடராசன் மாளிகை, 170, பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை -600 010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், அந்த பாடலின் மென்நகலினை (Soft Copy) தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் tncu08@gmail.com < mailto:tncu08@gmail.com > என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் 30.5.2025 பிற்பகல் 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும் என அரியலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

The post சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழாவையொட்டி கூட்டுறவு பற்றிய சிறந்த பாடலுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு appeared first on Dinakaran.

Related Stories: