அரியலூர், ஏப்.29: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் மே 1 தொழிலாளர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில்,கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துல், இதர பொருட்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது. எனவே, மேற்காணும் கிராம சபை கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.
The post அரியலூர் மாவட்டத்தில் மே 1ம் தேதி கிராமசபை கூட்டம் appeared first on Dinakaran.