குட்டை திடலில் காவல்துறை பறிமுதல் வாகனங்கள் அகற்றம்

 

உடுமலை, ஏப்.12: உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, நகரில் தேரோடும் வீதிகளில் சாலை புதுப்பிப்பு பணி நடைபெற்று வருகிறது. தேரோடும் வீதிகளில் வடக்கு குட்டை வீதியும் ஒன்றாகும். இது குட்டைத்திடல் அருகே காவல்நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ளது.இந்த வீதியில் காவல்துறையினர் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்களை ஏராளமான அளவில் நிறுத்தி வைத்துள்ளனர்.மேலும், மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளும் நிறுத்தப்பட்டிருந்தன.

இதனால் தேரோட்டத்தின் போது, தேர் செல்ல முடியாமல் நெருக்கடி ஏற்படுவேதாடு பக்தர்கள் நெரிசலில் சிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், தேரோட்டத்துக்கு முன்பாக, காவல்துறையினர் பறிமுதல் செய்த வாகனங்களை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குட்டை திடல் பகுதியில் இருந்து பறிமுதல் வாகனங்கள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து, காவல்துறைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post குட்டை திடலில் காவல்துறை பறிமுதல் வாகனங்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: