திருப்பூர், ஏப்.22: இடைநிலை கல்வி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற்று நிறைவடைந்தது.திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வினை 108 தேர்வு மையங்களில் 348 பள்ளிகளைச் சேர்ந்த 30,235 மாணவ மாணவிகளும், தனி தேர்வர்களாக 1,097 மாணவ மாணவிகள் என மொத்தம் 31,332 தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் ஒவ்வொரு தேர்விலும் 300 முதல் 400 பேர் வரை தேர்வு எழுத வராததால் 30 ஆயிரம் பேர் வரை தேர்வு எழுதியுள்ளனர்.நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.
திருப்பூரில் ராயபுரம் அருகே உள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தாராபுரம் தேன்மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என இரு மையங்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 1,750 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 30ம் தேதி வரை இந்த பணிகள் நடைபெற உள்ளது.நேற்று விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும் முன்பாக இப்பணியில் ஈடுபடக்கூடிய ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.மே 19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
The post பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.