திருப்பூர், ஏப்.22: பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவ மாணவிகளை பள்ளிகளில் சோ்க்க பெற்றோர்கள் பலரும் தயாராகி வருகிறார்கள். பள்ளியில் சோ்ப்பதற்கு முக்கிய ஆவணமாக ஆதார் தேவைப்படுகிறது.
இதனால் ஆதார் விண்ணப்பிக்க திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆதார் மையங்கள் மற்றும் இ சேவை மையங்களில் பெற்றோர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.திருப்பூர் கலெக்டா் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு புதியதாக ஆதார் விண்ணப்பிக்கவும், திருத்தம் விண்ணப்பிக்கவும் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் வரிசையில் காத்து நின்று விண்ணப்பித்து சென்றனர். இதுபோல் தாலுகா அலுவலகங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
The post குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆதாருக்கு புகைப்படம் எடுக்க குவிந்த பெற்றோர் appeared first on Dinakaran.