அவிநாசியில் ரூ.10.46 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

 

அவிநாசி, ஏப்.12: அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில், பருத்தி வரத்து அதிகரித்தது. ரூ.10 லட்சத்து 46 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, மொத்தம் 191..99 எடையுள்ள 546 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச். பி.டி.ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7000 முதல் ரூ.7868 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரையிலும் ஏலம் போனது.

நேற்று பருத்தி ஏல மையத்தில், மொத்தம் ரூ.10 லட்சத்து 46ஆயிரத்துக்கு பருத்தி ஏல ம்நடைபெற்றது. இந்த ஏலத்தில், ஆத்தூர், சத்தியமங்கலம்,கொள்ளேகால்,அந்தியூர், அத்தாணி, அவிநாசி,குன்னத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 143 பருத்தி விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 9 பருத்தி வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர்.

The post அவிநாசியில் ரூ.10.46 லட்சத்துக்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: