திருப்பூர், ஏப்.12: திருப்பூர் ஒன்றுபட்ட கோவை மாவட்டத்துடன் இருந்த போது 1983ம் ஆண்டு திருப்பூர் தெற்கு காவல் நிலையம் கட்டப்பட்டது. அதன் பின்னர் திருப்பூர் தனி மாவட்டமாக்கப்பட்டு, மாநகர போலீஸ் கமிஷனரகமாக உருவாகிய பின்னரும் அதே கட்டிடத்தில் தான் காவல் நிலையம் இயங்கி வந்தது. இதற்குள் குற்றப்பிரிவும் செயல்படுவதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனால் திருப்பூர் பழைய கலெக்டர் அலுவலக வளாகம் காட்டன் மார்கெட்டில் தற்காலிகமாக மாற்ற மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன் படி நேற்று தற்காலிக காவல் நிலையத்தை தெற்கு துணை கமிஷனர் தீபா சத்தியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து மாநகர துணை கமிஷனர் (தலைமையகம்) ராஜராஜன், தெற்கு சரக உதவி கமிஷனர் ஜான்,இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார்,ராஜேஸ்வரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.
The post காட்டன் மார்க்கெட் வளாகத்திற்குள் தற்காலிக காவல் நிலையம் திறப்பு appeared first on Dinakaran.