டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: சந்தையப்பாளையம் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா

 

அவிநாசி, ஏப்.11:அவிநாசியை அடுத்து சேவூர் சந்தையப்பாளையம் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவிநாசியை அடுத்து சேவூர் சந்தையப்பாளையம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 1ம் தேதி கம்பம் நடுதல் மற்றும் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.இதையடுத்து தினசரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனைகளும் நடைபெற்று வந்தது.

தினசரி இரவு பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 5 மணிக்கு அம்மை அழைத்தல், காலை 6 மணிக்கு, ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து மாரியம்மனை வழிபட்டனர்.காலை 9 மணிக்கு பூவோடு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.இரவு 7 மணிக்கு, கம்பம் களைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம்,நீர்மோர் வழங்கப்பட்டது. திருவிழா நிகழ்ச்சிகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

The post டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: சந்தையப்பாளையம் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: