திருப்பூர், ஏப்.11: தமிழ் புத்தாண்டு மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் கொல்லம் இடையே அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை மற்றும் 19ம் தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 3:30 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.
இந்த ரயில் திருப்பூரில் அதிகாலை 6:10 மணிக்கு நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கொல்லம் சென்னை சென்ட்ரல் சிறப்புரயில் 13 மற்றும் 20ம் தேதிகளில் இரவு 7:10 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 11:10 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்று அடைகிறது. இந்த ரயில் திருப்பூரில் அதிகாலை 3:15 மணிக்கு நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தொடர் விடுமுறை திருப்பூர் மார்க்கமாக சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.