பல்லடம், ஏப்.11: நடப்பு ஆண்டுக்கான சொத்துவரியை செலுத்தி 5சதவீத ஊக்கத்தொகை பெறலாம் என்று பல்லடம் நகராட்சி ஆணையாளர் சி.மனோகரன் தெரிவித்தார். பல்லடம் நகராட்சியில் நடப்பு ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு சொத்துவரியை வருகிற 30ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகையும், 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5சதவீதம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
பொதுமக்கள் தங்கள் சொத்துவரி மற்றும் இதர இன கட்டணங்களை நேரடியாக வார நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக மைய கணினி வரி வசூல் மையத்தில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாக செலுத்தலாம். சொத்து உரிமையாளர்கள், சொத்துவரியை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், பல்லடம் நகராட்சி அலுவலகங்களில் அமைந்துள்ள வரி வசூல் மையத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான சொத்துவரியை உடனடியாக செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம்.இந்த தகவலை பல்லடம் நகராட்சி ஆணையாளர் சி.மனோகரன் தெரிவித்துள்ளார்.
The post சொத்துவரியை செலுத்தி 5% ஊக்கத்தொகை பெறலாம் appeared first on Dinakaran.