அவிநாசி, ஏப்.22: அவிநாசி நகரம், கோவை – சேலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு, கோவை- திருப்பூர் கோவை-ஈரோடு, திருப்பூர்-கோவை செல்லும் பெரும்பாலான தனியார்,அரசுப் பேருந்துகள் அவிநாசி நகருக்குள் வந்து செல்வதில்லை. ஊருக்குள் வராமல் தனியார்,அரசுப் பேருந்துகள் புறவழிச்சாலை (பைபாஸ்) வழியாகவே தொடர்ந்து இயக்கி வருகின்றனர். இதனால் பள்ளிக்கும், கல்லூரிக்கும், செல்லுகின்ற மாணவர்களும்,பல்வேறு வேலைக்குச் செல்வோர் என அனைத்துத் தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக செல்லுகின்ற தனியார் பேருந்தில்,அவிநாசியை சேர்ந்த பயணி ஏறிய போது, அவிநாசி புதிய பேருந்தில் இறங்குவதாக கூறி பயணச்சீட்டை கேட்டுள்ளார்.
அப்போது பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர், புதிய பேருந்து நிலையம் செல்லாது என்றும், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீதுதான் பேருந்து செல்லும் என்றும் கூறி சிறிது தூரம் பஸ் புறப்பட்டு வந்ததும், பாதியிலேயே இறக்கி விட்டுள்ளனர்.இதுகுறித்து, அவ்வப்போது பொதுமக்கள், சமூகஅமைப்பினர் பிரச்னைக்குரிய பேருந்துகளை சிறைபிடித்து கண்டித்து, அனுப்பி வைக்கின்றனர். இருப்பினும், ஒருசில தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளின் நடத்துநர், ஓட்டுநர்கள் பயணிகளை அலட்சியப்படுத்தி, ஊருக்குள் வராமல் புறவழிச்சாலை (பைபாஸ்) வழியாகவே தொடர்ந்து இயக்கி வருகின்றனர். மேலும், கோவை காந்திபுரத்திலேயே அவிநாசிக்கு செல்லும் பயணிகளை பேருந்தில் ஏறவிடாமல் தடுக்கின்றனர். இதனால், அவிநாசிக்கு செல்ல வேண்டிய பயணிகள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலேயே வெகுநேரம் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் பெரும்பாலான பேருந்துகள் அவிநாசி பயணிகளை ஏற்றுவதில்லை. இதேபோல ஈரோடு பஸ் நிலையத்திலும், இரவு நேரங்களில் பெரும்பாலான பேருந்துகள் அவிநாசிக்கு வருகின்ற பயணிகளை, பயணம் செய்ய பேருந்தில் ஏற்றுவதில்லை. கோவைக்கு மட்டுமே ஏற்றுவதாக சொல்கின்றனர். இதேபோல, திருப்பூர் பஸ் நிலையத்திலும், இதேபோல இரவு நேரங்களில் பெரும்பாலான பேருந்துகள் அவிநாசிக்கு வருகின்ற பயணிகளை, பயணம் செய்ய பேருந்தில் ஏற்றுவதில்லை. கோவைக்கு மட்டுமே ஏற்றுவதாக சொல்கின்றனர். இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, இப்பிரச்னைக்கு போக்குரவத்துத் துறையினர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அவிநாசி நகருக்குள் வராமல் புறவழிச்சாலையில் இயக்கப்படும்: பஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.