திருப்பூர்,ஏப்.23: திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் துணை தாசில்தார்கள் 14 பேர் பணியிட மாறுதல் செய்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் காவல்துறை பயிற்சி முடித்த 7 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, துணை தாசில்தாராக இருந்த பரமேஷ் திருப்பூர் வடக்கு மண்டல துணை தாசில்தாராகவும், துணை தாசில்தாராக இருந்த கார்த்திக்குமார் திருப்பூர் தெற்கு மண்டல துணை தாசில்தாராகவும், துணை தாசில்தாராக இருந்த ஜெயலட்சுமி தாராபுரம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், துணை தாசில்தாராக இருந்த ஈஸ்வரி ஊத்துக்குளி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், துணை தாசில்தாராக இருந்த பாலவிக்னேஷ், பல்லடம் வட்ட வழங்கல் அலுவலராகவும், துணை தாசில்தாராக இருந்த சிவக்குமார் மடத்துக்குளம் தேர்தல் துணை தாசில்தாராகவும், துணை தாசில்தாராக இருந்த சாந்தி அவினாசி தேர்தல் துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் வடக்கு மண்டல துணை தாசில்தாராக இருந்த லோகநாதன் திருப்பூர் வடக்கு தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், தாராபுரம் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த கோபால் திருப்பூர் ஆர்டிஓ அலுவலகத்தின் கலைஞரின் மகளிர் உரிமை திட்ட துணை தாசில்தாராகவும், திருப்பூர் வடக்கு தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த சிவசக்தி ஊத்துக்குளி மண்டல துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோல், திருப்பூர் தெற்கு தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த கணேஷ்வரி ஊத்துக்குளி வட்ட வழங்கல் அலுவலராகவும், ஊத்துக்குளி வட்ட வழங்கல் அலுவலராக இருந்த சதீஷ்குமார் திருப்பூர் தெற்கு தேர்தல் துணை தாசில்தாராகவும், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு தலைமை உதவியாளராக இருந்த பிரேமலதா ஈ பிரிவு தலைமை உதவியாளராகவும், திருப்பூர் ஆர்டிஓ அலுவலக கலைஞர் மகளிர் உரிமை திட்ட துணை தாசில்தாராக இருந்த பபிதா கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு தலைமை உதவியாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
The post திருப்பூர் மாவட்டத்தில் 14 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.