27 ஆண்டுகளில் 76 முறை ரத்ததானம் செய்த சமூக சேவையாளருக்கு பாராட்டு

 

கூடலூர், ஏப். 12: கடந்த 27 ஆண்டுகளில் 76 முறை ரத்ததானம் செய்த கூடலூரை சேர்ந்த சமூக சேவையாளருக்கு விருது வழங்கப்பட்டது. கூடலூரை சேர்ந்தவர் சமூக சேவையாளர் அம்சா (42). கடந்த 30 வருடங்களாக கூடலூரில் புல்லட் மெக்கானிக் தொழில் செய்து வரும் இவர் தனது அன்றாட வாழ்வாதார நெருக்கடிகளுக்கு இடையில் நோயாளிகளுக்காக சேவை செய்வதையும் தனது கடமையாக கொண்டு செயல்பட்டு வருகிறார். கடந்த 27 ஆண்டுகளில் 76 முறை ரத்த தானம் செய்துள்ளார்.

இவர், ரத்ததானத்துடன் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டரை வழங்குவதோடு வாட்டர் பெட், வாக்கர், வீல்சேர் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய உபகரணங்களையும இலவசமாக வழங்கி உதவி வருகிறார். நோயாளிகளுக்கு உதவும் வகையில் லைப் லைன் ரத்ததான அமைப்பு என்ற பெயரில் அறக்கட்டளையை உருவாக்கி அதில் பல்வேறு பகுதிகளிலும் இளைஞர்களை இணைத்து செயல்படுத்தி வரும் நோயாளிகளுக்கான இவரது சமூக சேவையை பாராட்டி எஸ்எல்எம் ரோஸ் அறக்கட்டளை சார்பில் சிறந்த சேவையாளர் விருது வழங்கப்பட்டது.

The post 27 ஆண்டுகளில் 76 முறை ரத்ததானம் செய்த சமூக சேவையாளருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: