பாலக்காடு, ஏப்.24: சோளையூர் பகுதியில் சாலையோரம் நின்ற ரசிகர்கள், பொது மக்களை பார்த்து, நடிகர் ரஜினிகாந்த் காரில் நின்றபடி கையசைத்து கொண்டு சென்றார். அவரை கண்ட மலைவாழ் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். கேரள, தமிழக எல்லை பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி ஆனைக்கட்டி, சோளையூர் பகுதிகளில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் – 2 சினிமா படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. அட்டப்பாடி ஆனைக்கட்டியில் தங்கி சூட்டிங்கில் பங்கேற்று வரும் ரஜினிகாந்த்தை பார்ப்பதற்கு சாலையின் இருபுறங்களிலும் அவரது ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று ஆரவாரம் செய்தும், கை அசைத்தும் மகிழ்ந்தனர்.
ஆனைக்கட்டியில் இருந்து திறந்தவெளி காரில் சூட்டிங் பகுதிக்கு சென்ற, அவரை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். சோளையூர் பகுதியில் சாலையோரம் நின்ற ரசிகர்கள், பொது மக்களை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் காரில் நின்றபடி கையசைத்து கொண்டு சென்றார். அவரை கண்ட மலைவாழ் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post சோளையூர் பகுதியில் ரசிகர்களை பார்த்து காரில் நின்றபடி கையசைத்த நடிகர் ரஜினிகாந்த் appeared first on Dinakaran.