வடமாநில தொழிலாளி விபத்தில் பரிதாப பலி

கோத்தகிரி, ஏப்.23: கோத்தகிரி அருகே கப்பட்டி கிராமப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற வடமாநில தொழிலாளி விபத்தில் பலியானார். கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் உமேஷ் தமாங் (34). இவரும்அவரது சக நண்பரும் தனியார் விவசாய நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று உமேஷ் தமாங் மற்றும் அவரது சக நண்பர் மற்றொரு பகுதியில் வேலை கேட்பதற்க்காக கப்பட்டி பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை அருகே வரும் போது வாகனத்தை உமேஷ் தமாங் இயக்கி வரும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

இதில் படுகாயம் அடைந்த உமேஷ் தமாங் மற்றும் அவரது நண்பர் இருவரையும் முதலுதவி சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். இதில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் உமேஷ் தமாங் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அவரது நண்பரை படுகாயங்களுடன் உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உமேஷ் தமாங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கோத்தகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வடமாநில தொழிலாளி விபத்தில் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: