குன்னூர், ஏப்.28: குன்னூர் ஓட்டுப்பட்டரை பகுதியில் இரவு நேரத்தில் கன்றுக்குட்டியுடன் சுற்றி அச்சுறுத்தும் காட்டு மாடால் அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, தேயிலைத் தோட்டங்களில் உலா வந்த காட்டு மாடு கூட்டம் தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு தேடி வரத்தொடங்கியுள்ளது.
குன்னூர் அருகே ஓட்டப்பட்டரை கடைவீதி பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் கன்றுக்குட்டியுடன் உலா வந்த காட்டு மாடு நீண்ட நேரமாக அப்பகுதியில் உலா வந்தது. அப்போது, கன்று அருகில் இருந்ததால் காட்டு மாட்டை விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி கடைகளில் பொருட்கள் வாங்க வந்த பொது மக்களும் அச்சமடைந்தனர். எனவே மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் காட்டு மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post துணை ஜனாதிபதி வழியனுப்பி வைப்பு குன்னூர் பகுதியில் கன்றுக்குட்டியுடன் இரவில் அச்சுறுத்தும் காட்டு மாடு appeared first on Dinakaran.