மஞ்சூர், ஏப்.28: மஞ்சூர் அருகே கோலட்டியில் உள்ள சக்தி மாரியம்மன் கோயில் 35 ம் ஆண்டு சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கோலட்டியில், சக்தி மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த கோயிலில் 35ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 25ம் தேதி காப்புக்கட்டு மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை தொடர்ந்து புலிசோலை ஆற்றில் இருந்து கரகம் பாலிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் திருவீதி உலா சென்றார். உடன் ஏராளமான பக்தர்கள் மாவிளக்குகளை ஏந்தி ஓம் சக்தி, பராசக்தி’ என பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
இதை தொடர்ந்து பல்வேறு அபிஷேகங்களுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது இதில் கோலட்டி தாய்சோலை, தொட்டக்கம்பை, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டி மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.
The post கோலட்டி சக்தி மாரியம்மன் கோயில் 35-ம் ஆண்டு சித்திரை திருவிழா appeared first on Dinakaran.