கோவை, ஏப். 25: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து பங்குதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பு கூட்டத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் “நிதி ஆப்கே நிகட் 2.0” என்ற பெயரில் நடத்த உள்ளது. இத்திட்டத்தின்படி, நீலகிரி மாவட்டத்தில் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 28ம் தேதி காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை இண்ட்கோசர்வ், 35 சர்ச் சாலை, ஆழ்வார்பேட்டை, குன்னூர், நீலகிரி மாவட்டம் என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு கோவை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் பிரசாந்த் தலைமை தாங்குகிறார்.
இதில், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், இஎஸ்ஐசி பயனாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள், பிரச்னைகளை முறையிடலாம். தனிப்பட்ட உறுப்பினர் அல்லது ஓய்வூதியதாரர்கள் அவர்களின் குறைகளை தீர்க்க அவர்களின் UAN அல்லது வைப்பு நிதி கணக்கு எண், ஓய்வூதிய நியமன ஆணை எண் அவசியமாகும். மேலும், இபிஎப்ஓ தொடர்பான குறைகளை pghs.rocbe@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும், இஎஸ்ஐசி தொடர்பான புகார்களுக்கு benefit-srokovai@esic.nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் என கோவை மண்டல வைப்பு நிதி ஆணையாளர் சுரேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.
The post ஏப்.28ல் இபிஎப் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.