தாவரவியல் பூங்கா மாடம் தயார் செய்யும் பணிகள் மும்முரம்

ஊட்டி, ஏப்.24: நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் அனுபவிக்கப்படும் நிலையில், இச்சமயங்களில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்கா முழுவதிலும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். மேலும், மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியின் ஐந்து லட்சம் மலர் சென்று பூங்கா முழுவதும் நடவு செய்யப்பட்டு அதில் பல வண்ணங்கள் மலர்கள் பூத்துக் குலுங்கும்.

அதேபோல் 35 ஆயிரம் தொட்டிகளை கொண்டு பாடல்கள் பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். இது தவிர பல லட்சம் கோயில் மணல்களை கொண்டு பல்வேறு மலர் அலங்காரங்களும் மேற்கொள்ளப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மலர் கண்காட்சி நெருங்கிய நிலையில் நிலையில், பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்கா முழுவதிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு இவைகளை பராமரிக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மலர் தொட்டிகளில் மலர்கள் பூத்துவுடன் மாடங்களில் பல்வேறு வடிவங்களில் அடுக்கி வைக்கப்படும்.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்ல அனுமதிக்கப்படும். இதற்காக, தற்போது மாடங்களை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மாடங்களில் வர்ணம் பூசும் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் பூங்காவில் உள்ள நடைபாதைகள், அலங்கார வேலிகள் ஆகியவைகளுக்கும் வர்ணம் பூசும் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post தாவரவியல் பூங்கா மாடம் தயார் செய்யும் பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: