ஊட்டி, ஏப். 12: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் மரங்களுக்கு அடிப்பகுதிகளில் புதிய புற்கள் பாதிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். தற்போது முதல் சீசன் துவங்கிய உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்கா மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது, மேலும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பூங்காவில் உள்ள புல் மைதானங்களும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் மூடப்பட்டுள்ளது. மேலும், சிறிய புல் மைதானம் மட்டுமே சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
அங்கு உள்ள மரங்களின் அடியில் பூக்கள் சேதம் அடைந்துள்ள நிலையில், அவைகளை அகற்றி விட்டு புதிய பொருட்கள் நடவு செய்யும் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களிலும் புதிய புற்கள் மாற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது.மேலும் நாள்தோறும் புல் மைதானங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி சமன் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
The post தாவரவியல் பூங்காவில் புற்கள் பதிக்கும் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.