கேட்டை நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்…

கால புருஷனுக்கு பதினெட்டாவது (18) வரக்கூடிய நட்சத்திரம் கேட்டை நட்சத்திரமாகும். கேட்டை என்றால் மூத்தவர்கள் என்ற பொருளுண்டு. காலபுருஷனுக்கு எட்டாம் பாவகத்தை தொடர்பு கொண்டுள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஜேஷ்டா என்ற அழைக்கப்படுகிறது. ஜேஷ்டா என்றால் மூத்தவர் என்று பொருள். கேட்டை நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் வல்லாரை, வாளி, துடங்கொளி ஆகியவை ஆகும்.

இந்த நட்சத்திரத்திற்குரிய விருட்சமானது பராய் மரமாகும். இந்த விருட்சமானது புரா மர வகையைச் சேர்ந்தது. திருச்சி மாவட்டத்திற்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறை உள்ள திருக்கோயிலின் தலமரமாக இருப்பது மற்றொரு சிறப்பாகும். திருப்பராய்துறையை சுற்றி இந்த மரங்கள் அதிகமாக காணப்படுவதால்தான் அந்த ஊருக்கு திருப்பராய்துறை என்ற பெயர் வந்தது. இந்த மரமானது பிராய், பிறாமரம், குட்டிப்பலா, கழுதையாத்தி மரம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த மரத்தின் சிறப்பு என்னவெனில், இது இடி மின்னலை தாங்கும் சக்தி கொண்ட மரமாகும்.

மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் ‘‘வன்பராய் முருடொக்கும் என் சிந்தை’’ எனப் பாடுகிறார். எனவே, இந்த மரத்தின் சிறப்பை புரிந்துெகாள்ளுதல் சிறப்பாகும். வடமொழியில் இந்த விருட்சத்தை தாருகாவிருட்சம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மரங்கள் அதிகமிருந்தால் தாருகா வனம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மரமானது புதனின் நிறத்திற்குரிய கரும்பச்சை நிறத்தில் இருக்கிறது. இது மருத்துவக் குணம் கொண்ட மரம் புற்றுநோயை குணப் படுத்தும் சக்தி இந்த மரத்திற்கு உண்டு.

கேட்டையின் வெற்றி…

விஸ்வரூபன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் இந்திரனால் இறந்து போனான். மகனை இழந்த தந்தையான துவட்டா இந்திரனை வெற்றி கொள்ள ஒரு வேள்வியை நடந்தினான். அந்த வேள்வியின் பலனாக அந்த வேள்வி செய்த அக்னி குண்டத்தில் இருந்து விருத்திகாசுரன் என்ற அசுரன் தோன்றினான்.
பின்பு, கடும் தவமிருந்த விருத்திகாசுரன் பிரம்ம தேவனிடம் வரம் பெற்றான். அந்த தவத்தின் பயனால் மிகுந்த சக்தி பெற்றான். துவட்டாவின் ஆணையால், இந்திரனை எதிர்த்து போர் புரிந்தான். அப்பொழுது, இந்திரன் வஜ்ராயுதத்தோடு போர் புரிந்தான். ஆனால், வலிமையான வஜ்ராயுதம் உடைந்து போகவே விருத்திகாசுரனை எதிர்க்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடினான் இந்திரன். பின்பு, தேவலோகத்தை கைப்பற்றிய விருத்திகாசுரன் இந்திரனின் அனைத்து அம்சங்களையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தான். இந்திரனின் மழை, யானை, ஆயுதம், மின்னல் என பலவற்றை… தேவர்கள் இந்திரனை சாடினர். தேவர்கள் அச்சமுற்றனர். அச்சமயம், தேவகுருவை நிந்தனை செய்ததால்தான் இந்த தோல்வி உண்டானது என கூறவே. தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். உலகத்தை காக்கும் விஷ்ணு பகவான் ஒரு யோசனை சொன்னார். வேள்வியில் பிறந்தவன் விருத்திகாசுரன் அதைவிட பலம் கொண்ட தன்னையே தியாகம் செய்யும் ஒருவரால் மட்டுமே விருத்திகாசுரனை வெல்ல முடியும். பாற்கடலை கடைந்த பொழுது தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரும் ஆயுதங்கள் அனைத்தையும் ததீசி என்ற ரிஷியிடம் ஒப்படைத்தனர். அமிர்தம் பெற்ற அவர்கள் இனி ஆயுதம் தேவையில்லை என அப்படியே விட்டுவிட்டனர். மிகவும் ஆபத்தான அந்த ஆயுதங்களை முனிவர் முதுகெழும்பாக்கி தனக்குள் வைத்துக் கொண்டார். அந்த ததீசி என்னும் ரிஷியின் முதுகெழும்பால் செய்யப்பட்ட ஆயுதத்தை கொண்டு கேட்டை நட்சத்திர நாளில் போர் செய்தால் இந்திரனின் வெற்றி நிச்சயம் என விஷ்ணு யோசனை சொல்லவே. எனவே, தேவர்களை காக்க ததீசி என்ற முனிவரிடம் சென்று அவரின் முதுகுத் தண்டை புதிய வஜ்ராயுதமாக கொடுக்குமாறு வரம் கேட்கவே. தேவர்களுக்காக அந்த முனிவர் சம்மதித்தார். யோகநிலையில் தன் உடலை பிரிந்து சொர்க்கத்தை அடையும் பொழுது தன் உடலை எடுத்து கொள்ளுங்கள் என்றார் ததீசி முனிவர். முனிவரின் உடலை அக்னியால் சாம்பலாக்க முதுகெழும்பானது மின்னலின் வெளிச்சம் போல பளபளத்தது. பின்பு, விஸ்வகர்மா மூலம் இந்திரனின் புதிய வஜ்ராயுதம் செய்யப்பட்டது. இந்த ஆயுதத்துடன் கேட்டை நட்சத்திரத்தில் போர் செய்து வெற்றி பெற்றான் இந்திரன் என்பது கேட்டை நட்சத்திர வெற்றி புராணம்.

பொதுப்பலன்கள்

இவர்களுக்கு செவ்வாய் வலிமையான கிரகத்துடன் தொடர்புள்ளதால் தைரியமிக்கவர்களாக இருப்பார். செவ்வாய் – புதன் தொடர்புள்ளதாக இருப்பதால் சுறுசுறுப்பாகவும், நுட்பமாகவும் இயங்கக்கூடியவராக இருப்பர். சாதுர்யமாக பேசக்கூடியவராக இருப்பீர்கள்.

ஆரோக்கியம்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் – ெபண் இருபாலரின் மர்ம ஸ்தானங்களில் கிரங்கள் இருந்தால், சில பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. ஆகவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கேட்டை நட்சத்திரத்திற்குரிய வேதை நட்சத்திரம்்…

வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். கேட்டைக்கு அஸ்வினி என்பது வேதை நட்சத்திரமாக உள்ளது. இந்த நட்சத்திர நாளில் புதிய காரியங்களை தொடங்குவது வேண்டாம்.

பரிகாரம்

புதன் கிழமை அன்று வரும் கேட்டை நட்சத்திர நாளில் பராய் மரக் கன்றுகளை நடுவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு அகோபில வரதராஜ பெருமாள் திருக்கோயில். கேட்டை நட்சத்திரத்தன்று அர்ச்சனை செய்து கொள்வது நன்மை வாழ்வில் வளமை சேர்க்கும்.

The post கேட்டை நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்… appeared first on Dinakaran.

Related Stories: