ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் சரியான தூக்கம், சரிவிகித உணவு அவசியம்

பெரம்பலூர், ஏப். 11: ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் சரியான தூக்கம், சரிவிகித உணவு அவசியம் என்று பெரம்பலூரில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் டாக்டர் விளக்கம் அளித்தார். பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பில், \”ஆரோக்கியமே அற்புத வாழ்வு\” என்றத் தலைப்பில் மருத்துவர்களு டனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் முரளி தலைமை வகித்தார்.

அரிமா சங்கத்தின் சாசனத் தலைவர் மு.இராஜாராம் முன்னிலை வகித்தார். அஸ்வின் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கணேசன் கலந்துகொண்டு கலந்துரையாடலைத் தொடங்கி வைத்து நேர மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்திப் பேசினார். சிவா மருத்துவமனையின் பொதுநல மருத்துவர் டாக்டர் ராஜசேகரன் கலந்து கொண்டு பேசுகையில், சரியான தூக்கம், சரிவிகித உணவு மற்றும் அன்றாட நடைப்பயிற்சி, உடற் பயிற்சிகள் மூலம் உடல் நலம் பேணுவதன் அவசியம் குறித்தும், உடலியல் இயக்கத்தை சரிப்படுத்தும் சர்கார்டியன் ரிதம், அதிக நேரம் டிவி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் செல்போன் பயன் பாட்டினால் ஏற்படும் மன நல பாதிப்புகள், இருதய நோய்க்கான காரணங்கள், மாரடைப்பைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

எஸ்.கே.எஸ் மருத்துவ மனையின் அருவை சிகிச்சை நிபுணரான டாக்டர் செங்குட்டுவன், பொன்னையா மருத்துவ மனையின் இஎன்டி நிபுணரான டாக்டர் செந்தில்குமார், தேவராஜன் மருத்துவ மனையின் கண் மருத்துவர் மற்றும் அவசர சிகிச்சை நிபுணரான டாக்டர் புவனேஸ்வரி, மலர் மருத்துவமனை பொது மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவரான டாக்டர் விஜய் ஆனந்த் ஆகியோர் நோய்த்தடுப்பு, ஆரோக்கியத்தை மேம் படுத்தும் நடைமுறைகள் குறித்து விளக்கிப்பேசினர்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பெரம்பலூர் அரிமா சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்கத்தின் செயலாளர்கள் காசி விஸ்வநாதன், தமிழரசன், பொருளாளர் தர்மராஜ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

The post ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் சரியான தூக்கம், சரிவிகித உணவு அவசியம் appeared first on Dinakaran.

Related Stories: