பெரம்பலூரில் குவாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனை

பெரம்பலூர், ஏப். 11: பெரம்பலூரில் மாவட்ட ஜல்லி, எம்.சான்ட், கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நந்தக் குமார் தலைமை வகித்தார். மாவட்டசெயலாளர் அழகர், பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி. ராமச்சந்திரன், பொறுப் பாளர்கள் மோகன்ராஜ், குணசேகரன், செல்வக் குமார், மோகன், ஜெய ராமன், காமராஜ் உட்பட பலர் பேசினர்.

கூட்டத்தில் அரசு உடைக்கல் எடுக்க பர்மிட் எடுக்க ராயல்ட்டி தொகையை 150 சதவீதம் உயர்த்தியது குறித்தும், யூனிட் விலையேற்றுவது குறித்து விவாதிக்கப் பட்டது.இதில் அரசு புறம்போக்கு மலையிலிருந்து உடைக்கல் பர்மிட் எடுக்க ராயல்ட்டி தொகை 150 மடங்கு உயர்த்திய அரசின் உத்தரவினை ரத்து செய்து பழைய நடைமுறையிலியே ராயல்ட்டிதொகை செலுத்தி பர்மிட் எடுக்க அனுமதிக்க வேண்டும். ஜல்லி உள்ளிட் மூலப்பொருட்களின் விலை உயர்த்தும் சூழ்நிலை ஏற்படுவதால் மக்கள் மிகவும் பாதிக்கப் படுவர்.

எனவே ராயல்கட்டி தொகை உயர்வை ரத்து செய்யும் வரை பர்மிட் எடுப்பதில்லை போன்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டு மாநில சங்கம் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துறைமங்கலம் மதிவாணன், வினிஷ், செந்தில், சுந்தரம் உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் குவாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: