சாலையில் திடீரென தீப்பிடித்த ஸ்கூட்டர்

ராசிபுரம், ஏப். 11: ராசிபுரம் அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் தென்றல். இவரது டூவீலரை உறவினரான ஆனந்த் என்பவர் வாங்கிக்கொண்டு, ஆண்டகளூர்கேட் பகுதியில் இருந்து ராசிபுரம் நோக்கி ெசன்றார். கவுண்டம்பாளையம் முனியப்பன் கோயில் அருகே சென்றபோது, டூவீலரில் இருந்து புகை வருவதை கண்ட ஆனந்த், டூவீலரை சாலையோரம் நிறுத்த ஓரம் கட்டினார். அதற்குள் டூவீலர் முழுவதுமாக தீப்பற்றிக்கொண்டது. இதையடுத்து டூவீலரை சாலையில் போட்டு விட்டு குதித்து தப்பினார்.

தீ மளமளவென பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் விரைந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் டூவீலர் தீயில் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது. இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வெயில் அதிகரிப்பின் காரணமாக டூவீலர் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. இதுகுறித்து ேபாலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post சாலையில் திடீரென தீப்பிடித்த ஸ்கூட்டர் appeared first on Dinakaran.

Related Stories: