விசைத்தறி தொழிலாளர் சம்மேளன கூட்டம்

குமாரபாளையம், ஏப்.28: தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர்கள் சம்மேளன கூட்டம், குமாரபாளையம் சிஐடியூ தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் முத்துசாமி தலைமை தாங்கி பேசினார். மாநில பொதுச்செயலாளர் சந்திரன், பொருளாளர் அசோகன் மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்று விவாதித்தனர். ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களாலும், 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக சுருக்கி மேற்கொண்ட சட்ட திருத்தத்தாலும், விசைத்தறி தொழிலில் பெரு முதலாளிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், இந்த தொழிலை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொள்ளை லாபமடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளால் ஏற்பட்டுள்ள விலை உயர்வால், உழைக்கும் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே, ஒன்றிய அரசின் தொழிலாளர் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, வரும் மே 20ம்தேதி நடைபெறும் நாடு தழுவிய விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த போராட்டத்தை விளக்கி, மாவட்ட அளவில் கருத்தரங்கம், தெருமுனை கூட்டம், ஆலை வாயிற்கூட்டம், பிரசார இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

The post விசைத்தறி தொழிலாளர் சம்மேளன கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: