பள்ளிபாளையம், ஏப்.24: பள்ளிபாளையம் நகர அதிமுக சார்பில், சட்டமன்ற பொது தேர்தலுக்கான பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நகர செயலாளர் வெள்ளியங்கிரி தலைமையில் நடைபெற்றது. நகர பேரவை செயலாளர் டி.கே.சுப்பிரமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் சேர்மன் செந்தில் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ பங்கேற்று, ஆய்வு பணிகளை மேற்கொண்டார். முன்னாள் எம்எல்ஏ பிரபு பங்கேற்று பேசினார். 2026 சட்டமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், களப்பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில், நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ், செல்லதுரை, சிவக்குமார், ஆறுமுகம், கண்ணையன், செல்வராஜ், ஆடிட்டர் ராஜா, மற்றும் வார்டு செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.