மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் சார்பில் மத்தியஸ்தர் தின விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர், ஏப். 10: பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் சார்பில் மத்தியஸ்தர் தினத்தையொட்டி நடை பெற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பல்கிஸ் தொடங்கி வைத்து பேசினார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நேற்று (9ம் தேதி) காலை பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்றம் சார்பாக, மத்தியஸ்தர் தினத்தை Mediation Day முன்னிட்டு விழுப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை, பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான பல்கிஸ் தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்.

பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர், பெரம்பலூர் மாவட்ட சார்பு நீதிபதி அண்ணாமலை, பெரம்பலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தன்யா, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ், பெரம்பலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்ற நீதிபதிகள் (எண்-1) ஜெயக்குமார், (எண்-2) கவிதா, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரேஷ்மா ஆகியோர் முன்னிலை வகித்துச் சென்றனர்.

பேரணியில் நீதிமன்ற மத்தியஸ்தர்கள் துரைபெரியசாமி, ராதா கிருஷ்ணன் மூர்த்தி, குமாரசாமி, தமிழரசன், பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் தலைவர் சிவசங்கரன், செயலாளர் தங்கதுரை, மூத்த வழக் கறிஞர்கள் வாசுதேவன், சுப்பிரமணியன், தமிழ்ச் செல்வன் பேரா. முருககையன் மற்றும் வழக்கறிஞர்கள், சட்டப் பணிகள் ஆனைக் குழு அலுவலர்கள், சட்ட தன்னார்வளர்கள், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 120 மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியும், சமரச மைய ஒருங்கிணைப் பாளருமான மகேந்திரா வர்மா நன்றி தெரிவித்தார்.

பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கிய பேரணி, புது பஸ்டாண்டு உள்ளே சென்று சுற்றி வந்து, பெரம்பலூர்- அரியலூர் சாலை வழியாக மீண்டும் பாலக்கரையை வந்தடைந்தது. தொடர்ந்து பாலக்கரையில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பல்கீஸ் சட்ட விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வழங்கினார்.

The post மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் சார்பில் மத்தியஸ்தர் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: