பெரம்பலூர், ஏப். 10: பில்லங்குளம் கிராமத்தில் பங்குனி உத்திர திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு முருகன், மாரியம்மன் திரு வீதிஉலா நடைபெற்றது. நாளையும், நாளை மறு நாளும் முருகன், அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, பில்லங்குளம் கிராமத்தில் எழுந்தருளிஅருள்பாலித்து வரும் முருகன் மற்றும் மாரியம்மன் திருக் கோவிலில், பங்குனி உத்திர திருத்தேர் திரு விழா வருகிற 11ம் தேதி மாலை 3.30 மணிக்கு நடை பெறுகிறது. இந்த திருத் தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச். 29ம் தேதி முருகனுக்கு கொடியேற்றுதல் நடை பெற்றது. ஏப்.2ம் தேதி மாரியம்மனுக்கும், 4ம் தேதி முருகனுக்கும் காப்பு கட்டுதல் நடைபெற்றது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பில்லங் குளம் கிராமத்தைச் சேர்ந்த வடக்குத்தெரு, தெற்குத் தெரு, நடுத்தெரு வகைய றாக்காரர்கள் மற்றும் உறவுமுறை வகையறாக் காரர்கள், ஊர்ப் பொது மக்கள் என (9ம் தேதி) நேற்று வரை சாமி திருவீதி உலா நடை பெற்றது. இன்று (10ம் தேதி) கழுகு மரம் ஏறுதல், கோட்டை இடித்தல், மோடி எடுத்தல் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (11ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு முருகனுக்கு சக்தி அளித்தல், சாமி தேர்வில் ஏற்றுதலும், பகல் 1 மணிக்கு முருகனுக்கு பக்தர்கள் அலகு குத்தல் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு முருகன் திருத்தேர் வடம் பிடித்தல் நடை பெறுகிறது. நாளை மறு நாள் 12ம் தேதி அம்மனுக்கு சக்தி அழைத்தல், அம்மனுக்கு பக்தர்கள் அலகு குத்துதல் நடைபெற்ற பிறகு, மதியம் 3மணிக்கு அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. 13ம் தேதி மஞ்சள் நீராற்றுடன் விழா நிறைவடைகிறது.
The post பங்குனி உத்திர திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு பில்லங்குளம் முருகன், மாரியம்மன் திரு வீதிஉலா appeared first on Dinakaran.