பாலக்காடு, ஏப்.10: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அகழி அட்டப்பாடி முகாம் மையத்தில் பாலக்காடு மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் பிளாக் பஞ்சாயத்துத் தலைவர் மரூதி முருகன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மருத்துவ அதிகாரி டாக்டர் வித்யா உலக சுகாதார தினம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தேசிய விருதுப்பெற்ற பாடகி நஞ்சியம்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துணைத் தலைவர் மாத்யூ தலைமை வகித்தார். பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்து சுகாதாரத்தைப் பேணிக்காத்திட வேண்டும். கர்ப்பிணி பெண்கள், மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெறுவது நல்லது என்றும் டாக்டர்கள் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெருநாடகங்கள் மூலமாக பாலக்காடு அரசு செவிலியர், கல்லூரி மாணவியர்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
The post அகழி அட்டப்பாடியில் உலக சுகாதார தின விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி appeared first on Dinakaran.