பந்தலூர், ஏப். 10: பந்தலூர் அருகே தேவாலாவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் நீதிமன்றம் விசாரித்து நேற்று அதிரடியான தீர்ப்பு வழங்கியதை வரவேற்றும், வழக்கு தொடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து நேற்று தேவாலா பஜாரில் நெல்லியாளம் நகர கழக திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில், நகர கழக செயலாளர் சேகரன் தலைமை வகித்தார், முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, பொதுக்குழு உறுப்பினர் அமிர்தலிங்கம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலன், அவைத்தலைவர் பொன்ராஜ், அணிகளின் துணை அமைப்பாளர் முகம்மது மற்றும் வார்டு செயலாளர்கள் ஞானபிரகாசம், ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தேவாலாவில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் appeared first on Dinakaran.