சட்டப்பேரவையில் குமரி அனந்தனுக்கு இரங்கல் தீர்மானம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு குறித்து சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அவர் பேசுகையில், காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும், சட்டமன்றப் பேரவையின் முன்னாள் உறுப்பினருமான குமரி அனந்தன் மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது. குமரி அனந்தன் 1980-1984, 1985-1988, 1989-1991 மற்றும் 1991-1996 ஆகிய ஆண்டுகளில் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1977-1980ம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பாராட்டத்தக்க வகையில் சிறப்புறப் பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியதற்காக இவருக்கு தமிழ்நாடு அரசால் 2024ம் ஆண்டு “தகைசால் விருது” முதல்வரால் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. அன்னாரது மறைவால் அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு பேரவை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது” என்றார்.

The post சட்டப்பேரவையில் குமரி அனந்தனுக்கு இரங்கல் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: