படப்பிடிப்பு பகுதிக்கு செல்லும் சாலை தாண்டிக்குடியில் இருந்து கரடு முரடான, ஏற்ற இறக்கமான பாதையாக அமைந்து இருப்பதால் சரக்கு வாகனம், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே அப்பகுதிக்கு சென்று வருகின்றன. விஜய் ஜீப் மூலம் படப்பிடிப்புக்கு சென்றார். யாரும் படப்பிடிப்பு தளத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு விவசாய பணிகளுக்கு செல்பவர்களை மட்டும் அனுமதித்து வருகின்றனர். இதற்காக படப்பிடிப்பு தளத்தை சுற்றி காவலர்கள், பவுன்சர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் கோடை காலங்களில் காட்டுத்தீ அதிகளவில் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதால் படப்பிடிப்பு நடத்துவதற்கு தடை உள்ளது. ஆனால் விஜய் படக்குழுவினர் முறையாக அனுமதி பெற்றாலும், இந்த குறிப்பட காலங்களில் அதாவது ஏப்ரல், மே மாதங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தடை இருந்தும் இவர்கள் எப்படி அனுமதி பெற்றார்கள் என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கொடைக்கானல் அருகே தடையை மீறி விஜய் படப்பிடிப்பு? appeared first on Dinakaran.