கார் விபத்து மதுரை ஆதீனம் உயிர் தப்பினார்

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேலம் ரவுண்டானா பகுதியில், நேற்று காலை மதுரையிலிருந்து சென்னை சென்ற மதுரை ஆதீனத்தின் கார் மீது பின்னால் சென்ற கார் திடீரென மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மதுரை ஆதீனத்தின் கார் லேசான சேதம் அடைந்தது.

நல்லவேளையாக ஆதீனத்திற்கு காயம் ஏதுமில்லை. பின்னர் மதுரை ஆதீனம் சென்னை புறப்பட்டு சென்றதால் காவல் நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை. எனினும் விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post கார் விபத்து மதுரை ஆதீனம் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Related Stories: