ஈரோட்டில் தம்பதி கொலை சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை தேவை: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ேநற்று வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டத்தில் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த வயதான ராக்கியப்பன், பாக்கியம் ஆகியோரை கொள்ளையர்கள் அடித்து கொலை செய்து விட்டு, 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.

அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை மாற்றி மக்களிடம் நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். இதை உணர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

The post ஈரோட்டில் தம்பதி கொலை சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை தேவை: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: