இது மட்டுமின்றி தேர்தல் பிரசார பணிகளை முடுக்கி விடுவது பற்றியும், அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது பற்றியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார். கட்சி ரீதியாக பெரிய அளவில் உள்ள ஒன்றியங்களை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் குறித்தும் கூட்டத்தில் கேட்கப்படும் என்று தெரிகிறது. திமுக பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் அடுத்த மாதம் நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இது ெதாடர்பாகவும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுக்குழுவை கூட்டுவது குறித்து முக்கிய முடிவு appeared first on Dinakaran.