அதன்படி, பயணிகள் எந்த வகையான டிக்கெட்டை மொபைலில் காண்பிக்கலாம்? எது செல்லுபடியாகும்? பல பயணிகள், யூடிஎஸ் விதிமுறைகளை சரியாக புரிந்துகொண்டு பின்பற்றவில்லை என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. அதாவது, யூடிஎஸ் ஆப்ஸ் மூலம் இரண்டு வகையான முன்பதிவில்லாத டிக்கெட்களை வாங்கி பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதில் முதல் முறைப்படி, காகிதம் இல்லாமல் டிஜிட்டல் டிக்கெட்களை எடுத்து பயணிகள் ரயிலில் பயணிக்கலாம். டிக்கெட் சோதனையின் போது, உங்கள் போனில் இருக்கும் டிக்கெட்டை காண்பித்தால் போதும், அது செல்லுபடியாகும். மற்றொரு முறைப்படி, காகித வடிவில் இருக்கும் டிக்கெட் எடுத்து பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இரண்டு வகையான டிக்கெட்களும் யூடிஎஸ் ஆப்ஸ் மூலம் வாங்க கிடைக்கிறது. இருப்பினும், பல மக்கள் காகித வடிவ டிக்கெட் விருப்பதை தேர்வு செய்துவிட்டு, நேரடியாக ரயிலில் பயணிக்க துவங்கி விடுகின்றனர்.
சோதனையின் போது, மொபைலில் டிக்கெட்டை காண்பிக்கின்றனர். இது தவறானது என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. இந்த வகை டிக்கெட் மொபைலில் காண்பித்தால் செல்லாது. அபராதம் உறுதி, காகித வடிவ டிக்கெட் விருப்பத்தை தேர்வு செய்து, டிக்கெட் பெரும் பயணிகள் கட்டாயம் காகித வடிவ டிக்கெட்டை ரயில் நிலையங்களில் இருந்து பெற்ற பிறகே ரயிலில் பயணிக்க வேண்டுமென்று தெற்கு ரயில்வே தெளிவாக தெரிவித்துள்ளது. காகித வடிவ டிக்கெட்டை எடுத்துவிட்டு, அதை மொபைல் போனில் காண்பித்தால், அது செல்லாது என்றும், விதிமீறல் மற்றும் உரிய டிக்கெட் இல்லாமல் பயணித்த குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் குறித்த விவரங்கள் யூடிஎஸ் மொபைல் ஆப்ஸில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கவனக்குறைவினால், சிலர் ரயில் நிலையங்களில் உரிய டிக்கெட் இல்லாமல் மாட்டிக்கொண்டு அபராதம் செலுத்தி வருகின்றனர். இதை பொதுமக்கள் உடனே கவனிக்க வேண்டுமென்று தெற்கு ரயில்வே அறிவுரை வழங்கியுள்ளது. யூடிஎஸ் ஆப்ஸ் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் அபராதம் நிச்சயம் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
The post ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் ரயில் பயணிகள்; யூடிஎஸ் ஆப்ஸ் விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் அபராதம் நிச்சயம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை appeared first on Dinakaran.