திருப்பூர், ஏப்.4: திருப்பூர், வீரபாண்டியை அடுத்த தனலட்சுமி நகரை சேர்ந்தவர் தர்மராஜ் (38). இவர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தர்மராஜ் வீரபாண்டி பிரிவு அருகே ரோட்டோரம் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த நபர் ஒருவர் தர்மராஜின் செல்போனை பறித்துக்கொண்டு சென்றார். இது குறித்து தர்மராஜ் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிந்து திருப்பூர், கலைஞர் பஸ் நிலையத்தில் சுற்றித்திருந்த ஈஸ்வரன் (35) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தர்மராஜுன் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து ஈஸ்வரனை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.
The post பனியன் தொழிலாளியிடம் செல்போன் பறித்தவர் கைது appeared first on Dinakaran.