திருப்பூர், ஏப்.9: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர்(42). இவர் திருப்பூர் பி.என்.ரோடு பகுதியில் உள்ள ஓட்டலில் பங்குதாரராக உள்ளார். சங்கர் நேற்று முன்தினம் இரவு சொந்த ஊர் செல்வதற்காக மத்திய பஸ் நிலையம் வந்தார். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பூண்டி பகுதியில் சமையல் வேலை செய்யும் சக்தி (40) என்பவர் சங்கரின் செல்போனை பறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து சங்கரிடம் பணம் இருப்பதை அறிந்த சக்தி தனது நண்பர்களான திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி (25) மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜோதிடர் தர்மராஜ் (32) ஆகியோரை வரவழைத்து சங்கரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து சங்கர் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சக்தி, கார்த்தி மற்றும் தர்மராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து செல்போன் மற்றும் பணத்தை மீட்டனர்.
The post அவிநாசியில் திமுகவினர் கொண்டாட்டம் ஓட்டல் உரிமையாளரிடம் வழிப்பறி; 3 பேர் கைது appeared first on Dinakaran.