உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தாராபுரம் திமுகவினர் கொண்டாட்டம்

 

தாராபுரம், ஏப்.9: தமிழக கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய 10 முக்கிய மசோதாக்களையும் நிறைவேற்ற ஒப்புதல் வழங்கி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இந்த தீர்ப்பினை வரவேற்று தாராபுரம் நகர திமுக சார்பில் அண்ணா சிலை அருகே பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் திமுகவினர் கொண்டாடினர்.  நகர அவைத்தலைவர் கதிரவன் தலைமையில், நகரக் கழகச்செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், நகரத்துணைச் செயலாளர் தவச்செல்வன், வார்டு நிர்வாகிகள் ஜெயக்குமார், ஜீவா பெரியசாமி, பைக் செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் அன்பழகன், ஆனந்தி, நகர மன்ற கவுன்சிலர்கள் ஸ்ரீதரன், முபாரக் அலி, ஆதி திராவிட நலக்குழு சிவசங்கர், மற்றும் நகரக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

The post உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தாராபுரம் திமுகவினர் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: