உடுமலை, ஏப். 3: உடுமலை அருகே உள்ள செல்லப்பம்பாளையம் கிராமத்தில் சுமார் 600 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு 1980ல் உள்ளாட்சித் துறை அமைச்சராக குழந்தைவேலு இருந்தபோது, பேருந்து நிழற்குடை கட்டப்பட்டது.
ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கான்கிரீட் தளத்துடன் இந்த பேருந்து நிழற்குடை கட்டப்பட்டது. சுமார் 45 வருடங்களாக இந்த நிழற்குடை அதே நிலையில் பராமரிக்கப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் இரும்பு கம்பிகள் வைத்து, பிளாஸ்டிக் கூரையுடன் நிழற்குடை அமைக்கப்படுகிறது. இவை சில வருடங்களிலேயே பழுதடைந்து, காணாமல் போய் விடுகின்றன. ஆனால், செல்லப்பம்பாளையம் 45 ஆண்டுகளாக கம்பீராகமாக நிற்கிறது இந்த நிழற்குடை.
ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் இதனை இடித்துவிட்டு, புதிய நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக இந்த நிழற்குடை இடிக்கப்படவில்லை. தொடர்ந்து அதேநிலையில் பராமரிக்கப்படுகிறது. அந்த காலத்தில் அரசு கட்டுமான பணிகள் எவ்வளவு தரமாக நடந்தது என்பதற்கு இந்த நிழற்குடை உதாரணம். எனவே, தொடர்ந்து நல்லமுறையில் பராமரித்து வருகிறோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
The post பழமை மாறாமல் பராமரிக்கப்படும்; செல்லப்பம்பாளையம் பயணிகள் நிழற்குடை appeared first on Dinakaran.