இதில் அடிப்படை சேவைகளான குடிநீர், கழிவுநீர் மின்சார வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என ஒப்பந்தத்தில் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் படி கடந்த 7 மாத காலத்தில் 45% கட்டுமான பணி நிறைவடைந்து இருக்க வேண்டும். தொகுப்பு A அடிக்கட்டு அளவிற்கு செங்கல் வேலை முடிந்துள்ளது. தொகுப்பு B பைல் வேலையில் 437 ல் 372 முடிவடைந்துள்ளது. தொகுப்பு C இன்னும் தொடங்கப்படவில்லை. தொகுப்பு D காலப் பிளின்த் பீம் வரை நெம்பு வேலை முடிந்துள்ளது.
தற்போது வரை 15 % மட்டுமே பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 30% பணி பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் குடியிருப்புதாரர்கள் காலிசெய்து 2 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் குறித்த நேரத்தில் வீடு வழங்க முடியாத நிலையில் உள்ளது.
மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 17.3.2025 அன்று திட்டத்தை ஆய்வு செய்து உரிய காலத்திற்குள் குடியிருப்பினை குடியிருப்புதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்கள். உரிய காலத்திற்குள் கட்டுமான பணியினை முடிக்காத காரணத்தினால் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அவர்களால் கட்டண அபராதமாக நாள் ஒன்றிற்கு ரூ.2000 விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த காலத்தில் கட்டுமான பணியை எட்டும் வரை இந்த அபராத கட்டணம் தொடரும். எனவே பணியினை ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது .
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி 59 வது வார்டு பி.ஆர்.என் கார்டன் திட்டப்பகுதியில் ரூ.85 கோடி மதிப்பீட்டில் 503 அடுக்குமாடி குடியிருப்புகள் தூண் மற்றும் 9 தளங்களுடன் தங்கள் நிறுவனத்திடம் 18.12.2024 அன்று திட்டப்பகுதி ஒப்படைக்கப்பட்டது. தற்போது 20% பணி முடிந்திருக்க வேண்டும். ஆனால் 11% பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.
பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகின்றன. ஒப்பந்தக்காரர் இதுவரை திட்டத்தின் முக்கிய கட்டங்களைக் கூட நிறைவேற்றவில்லை. இந்த தாமதம், உரிய நேரத்தில் நிறைவடையாமைக்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஒப்பந்தக் காலக்கட்டத்தை மீறி தாமதம் செய்ததற்காக ஒப்பந்தக்காரருக்கு அறிவிப்பு கடிதம் அனுப்பி உள்ளது. உங்கள் நிறுவனத்தினால் ஏற்கனவே ஒப்பந்தத்தின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். தாமதம் தொடர்ந்தால் ஒப்பந்த விதிமுறைகளின் படி கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
The post உரிய காலத்திற்குள் பணியை முடிக்காததால் ஒப்பந்ததாரருக்கு நாள் ஒன்றிற்கு ரூ.2000 அபராதம்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.