தொழிலாளியிடம் பணம் பறித்த பிரபல ரவுடி கைது

மேட்டூர், மார்ச் 26: மேட்டூர் கோல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (42). மேட்டூர் பஸ் ஸ்டாண்டில் தள்ளுவண்டி கடையில், பழம் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, எலிக்கரட்டை சேர்ந்த ஜெயபால் மகன் கோபிநாத் (48) என்பவர், பிரபாகரனை கத்தியை காட்டி மிரட்டி, அவரது பாக்கெட்டில் இருந்த ₹450 பணத்தை பறித்து சென்றார். இது குறித்து புகாரின் பேரில், மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபல ரவுடியான கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தார்.

The post தொழிலாளியிடம் பணம் பறித்த பிரபல ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: