தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு குட்கா, பான்பொருட்களை தடை செய்துள்ளது. மேலும், கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், வட மாநிலங்களில் புகையிலைப் பொருட்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லாததன் காரணமாக அங்கிருந்து வரும் தொழிலாளர்கள் மொத்தமாக புகையிலை பொருட்களை கொண்டு வந்து இங்குள்ள வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வருவது அதிகரித்துள்ளது. இதன்காரணமாக நேற்று ரயில் நிலையத்தில் வடக்கு போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை பலத்த பரிசோதனை செய்த பின்பு அவர்களை வெளியே அனுமதித்தனர்.
The post ரயில் நிலையத்தில் தீவிர சோதனை ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை appeared first on Dinakaran.