4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

உடுமலை, மே 13: திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு சாதனை தொடரட்டும் பல்லாண்டு என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் கண்ணமநாயக்கனூர் ஊராட்சி மலையாண்டி கவுண்டனூர் நால் ரோட்டில் நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர் மெய்ஞானமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி செந்தில்வேல் வரவேற்றார்.

மாரிமுத்து, சாமிநாதன், கார்மேகம், மலர்விழி, சுப்பிரமணியம், ராமகிருஷ்ணன், மணியரசு, ராஜேஸ்வரி, கருப்பம்மாள் பாண்டியன், குமுதா பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக பேச்சாளர் நாகநந்தினி, மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி, ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாவட்ட திமுக அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன், துணை செயலாளர் சக்திவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பாபு, ராமசாமி, பருவதவர்த்தினி, யுஎன்பி குமார், அய்யாவு ரயில் நாகராஜ் தனபாலன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன் என பலர் கலந்து கொண்டனர்.

The post 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: