நீரோடைக்குள் மண் கடத்தல் அதிகரிப்பு

பல்லடம், மே 13: பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் நீரோடை குட்டை உள்ளது. பல்லடம் நகர் பகுதிகளில் பெய்யும் மழை நீர் பொள்ளாச்சி சாலை, மேற்கு பல்லடம், உள்ளிட்ட இடங்களில் இருந்து நீரோடைகள் வழியாக இந்த குட்டையில் மழைநீர் சேகரிக்கப்படும். இதன் முலம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் உயரும். மேலும் இந்த குட்டையில் நீர் நிரம்பி ஒன்பதாம் பள்ளம் குட்டைக்கு செல்லும். இதற்கிடையே பச்சாபாளையம் – ஒன்பதாம் பள்ளம் வழியாக செல்லும் நீரோடையில் அனுமதி இன்றி மண் எடுக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
‘‘பச்சாபாளையம் – ஒன்பதாம் பள்ளம் வழியாக செல்லும் நீரோடையில் அனுமதி இன்றி மண் எடுக்கப்பட்டு குட்டை உருவாகியுள்ளது. ஓடையில் வாகனங்கள் வந்து செல்ல தடம் அமைக்கப்பட்டு நீரோடையின் நீர்வழிப் பாதை மூடப்பட்டுள்ளது. மழைக்காலங்களில், மழைநீருடன் வருகின்ற கழிவுநீர் திசை மாறி அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் செல்லும் நிலை உள்ளது. ஓடை மற்றும் தனியார் நிலத்தில் கனிம வளத்தை கடத்தியவர்கள் குறித்து விசாரிக்க வருவாய்த் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. வருவாய்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை செய்தனர். பல்வேறு கிராமங்களிலும் மண் கடத்தல் நடந்துள்ளது. கனிம வள கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது வருவாய்த்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post நீரோடைக்குள் மண் கடத்தல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: