சேலம், மார்ச் 13:சேலம் டவுனில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான கடைகள், முதல் அக்ரஹாரம் வாசவி மஹால் அருகே உள்ளது. கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்கள், உள் வாடகைக்கு விட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக திருதொண்டர்கள் சபை சார்பில் இந்து சமய அறநிலையத்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் சம்பந்தப்பட்ட இடத்தை வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று ேநரில் ஆய்வு செய்தனர். அப்போது வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், தலைமை நில அளவையர் தினேஷ், அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா, கண்காணிப்பாளர் உமாதேவி, கணக்காளர் திலகம், மனுதாரர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
The post சுகவனேஸ்வரர் கோயில் கடைகளில்: அதிகாரிகள் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.