மேட்டூர், மார்ச் 14: சேலம் மாவட்டம் மேச்சேரியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது. பத்ரகாளி அம்மன் ஆலய மாசி மக தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் சின்ன தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று மாலை பெரிய தேரோட்டம் நடந்தது. தேர் நிலையிலிருந்து புறப்பட்டு சேலம் சாலை, சந்தைப்பேட்டை வழியாக நங்கவள்ளி சாலையில் மேற்கு ரத வீதியில் கிராம சாவடி அருகில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. ஆலய செயல் அலுவலர் சுதா தலைமையில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து அம்மனை வழிபட்டனர். இன்று(14ம் தேதி) மாலை பெரிய தேர் நிலை சேர்கிறது. நாளை(15ம் தேதி) இரவு சாதாபரணி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
The post மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் மாசித்தேரோட்டம் appeared first on Dinakaran.