கோபி,மார்ச்21: கோபி அருகே உள்ள கூகலூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 81வது ஆண்டு விழா, நிழற்கூரை திறப்பு விழா மற்றும் பாராட்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் ரமாராணி தலைமையில் நடைபெற்றது. 2023-24ம் கல்வி ஆண்டில் என்.எம்.எம்.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கும், கலைத்திருவிழாவில் வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், புத்தகங்கள் எழுதி வெளியிட்ட 15 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு விழா, நிழற்கூரை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் கூகலூர் பேரூராட்சி தலைவர் ஜெயலட்சுமி மாரப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் அய்யாசாமி சிறப்புரையாற்றினார்.பேரூராட்சி துணைத்தலைவர் ராஜாராம், கார்த்திகேயன் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சங்கீதா பிரபாகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக பள்ளி ஆசிரியை தவமணி ஆண்டறிக்கை வாசித்தார். பணி ஓய்வு பெற்ற சத்துணவு சமையலர் சுசீலாபாய்க்கு பாராட்டு விழா நடைபெற்றது. முடிவில் ஆசிரியை ஆர்த்தி நன்றி கூறினார்.
The post ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.