பவானி,மார்ச்18: பவானியில் மதநல்லிணக்க இப்தார் விருந்து, பவானி சட்டமன்றத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடைபெற்றது. இவ்விருந்திற்கு, மாவட்டப் பொருளாளர் முகமது ஜாபீர் தலைமை தாங்கினார். பவானி தொகுதிச் செயலா ளர் நிஹார் (எ) எஸ்.ஜன்னத்துல் பிர்தௌஸ், தலைவர் ஜாஹிர் உசேன், துணைத் தலைவர் எம்.முஹம்மது முன்னிலை வகித்தனர். பவானி எம்எல்ஏ கே.சி.கருப்பணன் பங்கேற்று இப்தார் விருந்தைத் தொடக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், மாநிலச் செயலாளர் ஷபீக் அஹம்மது, கோவை மண்டலச் செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம், அதிமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் ஜாபர் அலி, ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் அப்துல் ரகுமான், பவானி நகரத் தலைவர் சிராஜுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post பவானியில் சமூக நல்லிணக்க இப்தார் விருந்து appeared first on Dinakaran.