ஈரோடு,மார்ச்18: வரும் மே, ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டய தனித் தேர்வர்கள் தங்களது விண்ணப்பத்தை இன்று (18ம் தேதி) முதல் 24ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிரத்து காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பெருந்துறையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in < //www.dge.tn.gov.in > என்ற இணையதளம் மூலமாக உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கத்தவரும் தேர்வர்கள் வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் சிறப்பு அனுமதி கட்டணம் ரூ. 1,000த்துடன் விண்ணப்பிக்கலாம் தபால் மூலமாக வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அதேபோல, தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.